அனர்த்த கொடுப்பனவுகள்...! புதிய வழிகாட்டல் வெளியீடு

Sri Lanka Government Of Sri Lanka Money
By Shalini Balachandran Jan 08, 2026 12:13 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

அனர்த்தங்களினால் சேதமடைந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கும் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள வீடுகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்குமான வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அவசர அனர்த்த நிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்காக இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தநிலையில், 2025-12-05 திகதியிடப்பட்ட வரவு செலவுத் திட்டச் சுற்றறிக்கை இலக்கம் 08/2025 மற்றும் 2025-12-20 திகதியிடப்பட்ட வரவு செலவுத் திட்டச் சுற்றறிக்கை இலக்கம் 08/2025 (i) ஆகியவற்றின் ஊடாக முன்மொழியப்பட்ட வலுவூட்டல் திட்டத்தின் கீழ், வீட்டுச் சேதங்களுக்கான கொடுப்பனவுகளை மிகவும் வினைத்திறனாகவும் பயனுள்ளதாகவும் வழங்குவதற்கான அறிவுறுத்தல்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

உத்தியோகப்பூர்வ கையிருப்பில் உச்சம் தொட்ட இலங்கை...!

உத்தியோகப்பூர்வ கையிருப்பில் உச்சம் தொட்ட இலங்கை...!

 நிலவிய அனர்த்தம் 

இதனடிப்படையில், 2025 நவம்பர் 21 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நிலவிய அனர்த்தம் மற்றும் அதன் பின்னரான அனர்த்த சூழலினால் ஏற்பட்ட வீட்டுச் சேதங்கள் இதற்குப் பொருந்தும்.

கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் அனர்த்தத்தினால் அழிவடைந்திருந்தால் அவற்றை இலவசமாக வழங்குவதற்கு பிரதேச செயலாளர்கள் தகுந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

அனர்த்த கொடுப்பனவுகள்...! புதிய வழிகாட்டல் வெளியீடு | Sri Lanka Govt Disaster Allowance Guidelines Homes

ஆவணங்கள் தொடர்பான சிக்கல்கள் எழும் போது, கிராமிய மற்றும் பிரதேச அனர்த்த முகாமைத்துவ மற்றும் நிவாரணச் சேவைக் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில், உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் அல்லது பிற உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களைக் கொண்டு கொடுப்பனவுகளைச் செலுத்த முடியும்.

அல்லது ஆவணங்களை பின்னர் சமர்ப்பிக்கும் அடிப்படையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபடும் பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து இதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

கிராமிய அனர்த்த முகாமைத்துவக் குழு மற்றும் பிரதேச செயலாளருக்கு மேலதிகமாக, பின்வரும் அதிகாரிகளுக்கும் இந்த நிவாரணப் பணிகளில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன:

  1. நிர்வாக கிராம உத்தியோகத்தர்
  2. காணி உத்தியோகத்தர்
  3. சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்
  4. வீட்டு வசதிகள் அதிகாரசபைப் பிரதிநிதி
  5. சமுர்த்தி உத்தியோகத்தர்
  6. நகர அபிவிருத்தி அதிகாரசபைப் பிரதிநிதி
  7. வீட்டு வசதி உத்தியோகத்தர்
  8. ஏனைய கள உத்தியோகத்தர்கள்

கட்டைக்காட்டுடன் சேவையை நிறுத்தும் பேருந்துகள்: மக்கள் கடும் அவதி

கட்டைக்காட்டுடன் சேவையை நிறுத்தும் பேருந்துகள்: மக்கள் கடும் அவதி

அமெரிக்காவில் விசா விதிகள் இறுக்கம்...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

அமெரிக்காவில் விசா விதிகள் இறுக்கம்...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021