வாகன இறக்கமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
மத்திய கிழக்கில் நிலவிவரும் மோதல் சூழல் முடிவுக்கு வந்தவுடன், வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரிக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார்.
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மோட்டார் பேரணி 2026 வாகனக் கண்காட்சியில் கலந்துகொண்டபோது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முதன்மை நோக்கம்
இலங்கை சமூகத்தில் பொறுப்பான வாகனப் பயன்பாட்டுக் கலாச்சாரத்தையும், ஒழுக்கமான சாரதி நடைமுறைகளையும் ஊக்குவிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

பிரதம விருந்தினராகக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித, ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமாக ஒரு வாகனத்தை வைத்திருக்கவும் பயன்படுத்தவும் வாய்ப்புள்ள ஒரு நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை என்று குறிப்பிட்டுள்ளார்.
வரி தொடர்பான கட்டுப்பாடுகள்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, நாட்டின் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இறக்குமதிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்ததால், இலங்கையால் எந்த வாகனங்களையும் இறக்குமதி செய்ய முடியவில்லை என்பதை அவர் நினைவு படுத்தியுள்ளார்.

இதன்படி, மத்திய கிழக்கில் ஏற்பட்ட எதிர்பாராத மோதல் சூழல், பொருளாதார நிலைத்தன்மை மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மை குறித்த கவலைகளை உருவாக்கியதால், சில வரி தொடர்பான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், இந்த நடவடிக்கைகள் தற்காலிகமானவை மட்டுமே என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்