ஒரே சீனா என்ற கொள்கையை இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளது : சபாநாயகர் எடுத்துரைப்பு
அரசாங்கம் என்ற வகையில் இலங்கை எப்பொழுதும் ஒரே சீனா என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங்கிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று (19) நாடாளுமன்றத்தில் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன நாடாளுமன்ற சபாநாயகர்) ஸாவோ லெஜினின் புதுவருட வாழ்த்துச் செய்தியை இதன்போது சீனத் தூதுவர் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்தார்.
'ஒரே சீனா' என்ற கொள்கை
இரு தரப்பினருக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் 'ஒரே சீனா' என்ற கொள்கை தொடர்பில் இலங்கை வழங்கிவரும் ஆதரவுக்கு சீனத் தூதுவர் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
அரசாங்கம் என்ற வகையில் இலங்கை எப்பொழுதும் ஒரே சீனா கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது தெரிவித்தார்.
சீன முதலீட்டு அபிவிருத்தித் திட்டங்கள்
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகர திட்டம் உள்ளிட்ட சீன முதலீட்டு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இரு தரப்பினருக்குமிடையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |