இலங்கையில் மக்கள் தொகையை விடவும் தொலைபேசிகள் அதிகம்
நாட்டின் சனத் தொகையை விடவும் தொலைபேசி பாவனை அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கையடக்கத் தொலை பேசிகள் உட்பட மூன்று கோடியே பதின்மூன்று இலட்சத்து எண்பத்திரண்டாயிரம் (31,382,000) தொலைபேசிகளை மக்கள் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.
மக்கள்தொகை இரண்டு கோடி
நாட்டின் மக்கள்தொகை சுமார் இரண்டு கோடியே இருபத்தொரு இலட் சத்து எண்பத்தாயிரமாக உள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2022 ஆண்டு அறிக்கையின்படி, நாட்டில் நூறு (100) பேருக்கு 12 என்ற வீதத்தில் நிலையான தொலைபேசிகள் பாவனையில் உள்ளன.
கையடக்க தொலைபேசிகள் பாவனை
கையடக்க தொலைபேசிகள் 100 பேருக்கு 142 என்ற வீதத்தில் பாவனையில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
இணைய வசதிகள் நூறு பேருக்கு 97.7. என்ற அடிப்படையிலுள்ளது . கடந்த ஆண்டு (2022) டிஜிட்டல் தர வாழ்க்கைச்
சுட்டெண்ணின் படி, இலங்கை 117 நாடுகளில் 89 ஆவது
இடத்தைப் பிடித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
