ஒரு மாதத்தின் பின்னரே வரவுள்ள எரிபொருள் கப்பல்கள் -வெளிவந்த தகவல்
ஒரு மாதத்திற்கும் மேலாக வராத எரிபொருள் கப்பல்
இலங்கைக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக எரிபொருள் கப்பல் வராத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜுலை மாதம் 22 ஆம் திகதி வரை இலங்கைக்கான எரிபொருள் கப்பலை கொள்வனவு செய்ய முடியாது என பிரதமரின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க நேற்று தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அதற்கு முன்னதாக ஓரிரு கப்பல்களை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றியளிக்காத முயற்சி
இந்திய கடன் முறையின் கீழ் கடைசி எரிபொருள் கப்பல் கடந்த 16ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது. அதன் பின்னர் ஜூன் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இரண்டு எரிபொருள் கப்பல்களை இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த போதும் அது வெற்றியளிக்கவில்லை.
சாகல ரத்நாயக்கவின் கூற்றுப்படி, அடுத்த எரிபொருள் கப்பல் ஜூலை 22 அன்று வந்தடையும்,அதாவது கடைசி கப்பல் கிடைத்து ஒரு மாதத்திற்கும் மேலான பின்னர்.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் எரிபொருளை உற்பத்தி செய்யாவிட்டால், இலங்கைக்கு ஒவ்வொரு மாதமும் 10-12 எரிபொருள் கப்பல்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
