இந்நாட்கள் இலங்கைக்கு தீர்மானம் மிக்கது! கரு ஜயசூரிய
Sri Lanka
Karu Jayasuriya
Geneva Info
By Vasanth
இலங்கையின் வெளிவிவகார உறவுகளைப் பொறுத்தவரை, இது மிகவும் முக்கியமான வாரமாகும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இது குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், வெளிவிவகார உறவுகளைப் பொறுத்தவரையில், இது இலங்கைக்கு மிகமுக்கியமான வாரமாகும். ஒரு நாடு என்ற வகையில் முன்நோக்கிச் செல்வது குறித்த பேச்சுவார்த்தைகளின் போது நாட்டின் இறையாண்மையை சமரசத்திற்கு உட்படுத்த முடியாது.
எனினும் கௌரவமான நாடொன்றின் பொறுப்புவாய்ந்த பிரஜைகள் என்ற அடிப்படையில் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட கடப்பாடுகளை நிறைவேற்றுவதிலும் தண்டனைகளிலிருந்து விலகுவதை முடிவிற்கு கொண்டுவருவதிலும் முனைப்புடன் செயற்பட வேண்டும் என்றுள்ளது.