இராணுவம் மற்றும் காவல்துறையினருடன் முரண்பட்ட மக்கள் - போக்குவரத்தும் ஸ்தம்பிதம்

Nuwara Eliya Sri Lanka Sri Lankan Peoples SL Protest Sri Lanka Fuel Crisis
By Kalaimathy Jun 07, 2022 06:19 AM GMT
Report

மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி ஹட்டன் நகரின் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக மக்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடந்த 5 ஆம் திகதி 6600 லீற்றர் மண்ணெண்ணெய் கிடைத்துள்ளதுடன், அந்த எரிபொருளை குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துவிட்டு, வரிசையில் கடைசியில் காத்திருந்த பெருந்தொகையான மக்களுக்கு அன்றைய தினம் மண்ணெண்ணெய் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் இன்றைய தினம்  மண்ணெண்ணெய் கிடைக்கும் என எரிபொருள் நிலைய ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டது.

மண்ணெண்ணெய்க்காக காத்திருந்த மக்கள்

இராணுவம் மற்றும் காவல்துறையினருடன் முரண்பட்ட மக்கள் - போக்குவரத்தும் ஸ்தம்பிதம் | Sri Lanka Hatton Fuel Peoples Protest Dollar

இதனையடுத்து, இன்றைய தினம் எரிபொருள் நிலையத்திற்கு சென்ற போது மீண்டும் மண்ணெண்ணெய் இல்லை என சம்மந்தப்பட்டவர்களால் தெரிவித்ததையடுத்து, ஆவேசமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மண்ணெண்ணெய் விநியோகம் செய்வதற்கு முறையான முறைமை ஏற்படுத்தக் கோரி காலை முதல் மண்ணெண்ணெய்க்காக வரிசையில் நின்ற சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை, இராணுவத்தினருடன் முரண்

இராணுவம் மற்றும் காவல்துறையினருடன் முரண்பட்ட மக்கள் - போக்குவரத்தும் ஸ்தம்பிதம் | Sri Lanka Hatton Fuel Peoples Protest Dollar

ஆரப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் காவல்துறை, இராணுவத்தினர் மற்றும் எரிபொருள் நிலைய பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரதான வீதியை மறிக்க வேண்டாம் என தெரிவித்த காவல்துறையினரின் கோரிக்கையை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் நிராகரித்தனர்.

போக்குவரத்து ஸ்தம்பிதம்

இராணுவம் மற்றும் காவல்துறையினருடன் முரண்பட்ட மக்கள் - போக்குவரத்தும் ஸ்தம்பிதம் | Sri Lanka Hatton Fuel Peoples Protest Dollar

இந்நிலையில், காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் காரணமாக போக்குவரத்தும் ஸ்தம்பிதமாகியுள்ளது.

குறிப்பாக ஹட்டன் – நுவரெலியா, ஹட்டன் - கொழும்பு, ஹட்டன் – கண்டி போன்ற பிரதான வீதியினூடான போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமாகியுள்ளது.

இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்