வெளிநாட்டுக் கடன்களால் சிக்கலில் இலங்கை - லால் விஜேநாயக்க
இலங்கை இன்று எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளும் நிலவும் கடன் சுமையினால் உருவானவை என சிவில் சமூக ஆர்வலர் சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க (Lal Wijenayake) தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்கள் பொருளாதார பெறுமதிமிக்க திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படவில்லை எனவும், அரசியல்வாதிகளின் பிம்பத்தை கட்டியெழுப்புவதிலேயே கவனம் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச் சந்திப்பின்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக செயற்படுத்தப்படும் தவறான நிர்வாகத்தால் நாட்டின் கடன் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது.
ராஜபக்சர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன், கடன் பெறுவது வழமையான ஒரு விடயமாக மாறியுள்ளது.
கடன்களைப் பெறுவது அரசாங்கத்தின் குறைபாடு அல்ல, அத்தகைய கடன்கள் பயனுள்ள திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி முயற்சிகளுக்காக செலவிடப்பட வேண்டும்.
ஆனால், அதற்குப் பதிலாக வருமானம் ஈட்டத் தவறிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது” என்றார்.
