அத்து மீறிய இந்திய மீனவர்கள்- பருத்தித்துறை நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!
india
arrest
police
sri lanka
court
fisher man
By Kalaimathy
இந்திய மீனவர்களுக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த 31ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 21 இந்திய மீனவர்களை பருத்தித்துறை மீனவர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.
பருத்தித்துறை மீனவர்களிடம் இருந்து இந்திய மீனவர்களை மீட்ட கடற்படை அவர்களை கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள்.
21 மீனவர்களையும் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதாவன் உத்தரவிட்டார். இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது 21 மீணவர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதித்த நீதவான், அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்துள்ளார்.





மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்