சென்னை - காங்கேசன்துறை கப்பல் சேவை - முதற்கட்டமாக யாழ்ப்பாணம் வரவுள்ள கப்பல்
Jaffna
Chennai
India
By pavan
எதிர்வரும் 17 ஆம் திகதி சென்னையில் இருந்து கப்பலொன்று காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
குறித்த கப்பலை வரவேற்பதற்காக துறைமுகங்கள் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - சென்னை கப்பல் சேவை
காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன் முதற்கட்ட பரீட்சார்த்தமாகவே குறித்த கப்பல் சென்னையில் இருந்து காங்கேசன்துறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை காங்கேசன்துறை துறைமுகம் நாளை மறுதினம் கப்பல் துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவால் திறக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்