இலங்கை – இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை: ஆராய வரும் புதிய குழு
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டு கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய(India) கடற்றொழிலாளர்களின் விடுதலை குறித்து ஆராய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நாட்டுக்கு வந்தடைந்துள்ளனர்.
இராமேஸ்வரத்தில் உள்ள பாரம்பரிய இந்திய கடற்றொழிலாளர் நலச் சங்கத்தின் தலைவர் வி.பி. சேசுராஜா மற்றும் நான்கு உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அவர்கள் இன்று(25.03.2025)யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கடற்றொழிலாளர்களின் பிரச்சினை
இந்த குழு, பறிமுதல் செய்யப்பட்ட கடற்றொழிலில் படகுகளை ஆய்வு செய்ய உள்ளதுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களை விடுவிக்கக் கோருவதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் ஏப்ரல் 01 ஆம் திகதி வரை இந்த குழு இலங்கையில் தங்கியிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை மீனவர்கள் சார்பில் சுப்பிரமணியம் (யாழ்ப்பாணம்), மரிய ராசா (முல்லைத்தீவு), ஆலம் (மன்னார்), பிரான்சிஸ் (கிளிநொச்சி), அந்தோணி பிள்ளை (கிளிநொச்சி), சங்கர் (மன்னார்) ராமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), அன்ன ராசா (யாழ்ப்பாணம்), வர்ண குல சிங்கம் (யாழ்பாணம்) உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 2 நாட்கள் முன்
