சிறிலங்கா பிரதமரின் வடக்கு விஜயம்; தீவிர கண்காணிப்பில் படையினர்- மறுக்கப்பட்டது ஊடகவியலாளர்களுக்கான அனுமதி!
sri lanka
jaffna
mahinda
prime minister
northern province
temples
By Kalaimathy
சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நயினாதீவு நாக விகாரைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மத ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.
நயினாதீவு நாக விகாரை மற்றும் நயினை நாகபூசணி அம்மன் ஆலயம், ஆரியகுளம் நாக விகாரைக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.
பிரதமரின் வருகையையொட்டி யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்ததுடன் காவல்துறையினரும் இராணுவத்தினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.









1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி