யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியர் ஒருவருக்குப் பேராசிரியராகப் பதவி!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியர் ஒருவரை் திறமை அடிப்படையில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
விஞ்ஞான பீடத்தின் தாவரவியற் துறையைச் சேர்ந்த இணைப் பேராசியர் பி. செவ்வேள் தாவரவியலில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்படுவதற்கு பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று சனிக்கிழமை காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த இணைப் பேராசியர் பி. செவ்வேளின் மதிப்பீடு, நேர்முகத் தேர்வு முடிவுகள் இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அவற்றின் படி, தாவரவியற் துறையைச் சேர்ந்த இணைப் பேராசியர் பி. செவ்வேள் தாவரவியலில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
தியாக தீபத்திற்கான மெய்யான அஞ்சலி, தமிழர் ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் இருப்பதாகும்... 22 மணி நேரம் முன்