கோட்டாபயவுக்கு உறுதிமொழி வழங்கியுள்ள ஜப்பான் தூதுவர்!
Gotabaya Rajapaksa
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Japan
By Kalaimathy
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி (Hideaki Mizukoshi) தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் கொழும்பு, கோட்டையிலுள்ள அரச தலைவர் மாளிகையில் கோட்டாபய ராஜபக்சவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையுடனான பொருளாதார, சமூக மற்றும் கலாசார உறவுகளை தொடர்ந்து பேணுவதாகவும் ஹிடேகி மிசுகோஷி தெரிவித்தார்.
இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய ஆதரவுக்கு அரச தலைவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.