நாட்டின் எதிர்கால பொருளாதார திட்டங்கள் தொடர்பில் ஜப்பான் பிரதமருடன் ரணில் சந்திப்பு!
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவிற்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
டோக்கியோ நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் எதிர்கால பொருளாதார திட்டங்கள் தொடர்பில் ஜப்பானிய பிரதமருடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் சிறிலங்கா அதிபர், ஜப்பான் மன்னர் நருஹிட்டோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
டோக்கியோவில் உள்ள இம்பீரியல் மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பிலிபைன்ஸ் பயணமாகவுள்ள ரணில்
அத்துடன், சிறிலங்கா அதிபர் ஜப்பான் மன்னரையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவுள்ளார். அதன் பின்னர் பிலிப்பைன்ஸுக்கு பயணிக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெனிலா நகரில் ஆரம்பமாகவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கவே அவர் பிலிப்பைன்ஸுக்கு செல்லவுள்ளார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கடந்த 26 ஆம் திகதி சிறிலங்கா அதிபர் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
