தமிழரின் உணர்வெழுச்சிப் போராட்டத்தை திசைதிருப்ப முற்பட்டோர் விரட்டியடிப்பு!
கிளிநொச்சியில் இடம்பெற்ற போராட்டத்தில் குழப்பம் விளைவிக்க முற்பட்டவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தாம் ஊடகவியலாளர்கள் எனவும், இன்றைய போராட்டத்தில் சர்வதேச விசாரணை வேண்டாம், உள்நாட்டு விசாரணை போதும் என கூறி குரல்ப்பதிவு மேற்கொள்ள இருவர் முயற்சித்துள்ளனர்.
போலி அடையாள அட்டையுடன் குரல்பதிவு செய்ய முயற்சி
அவர்கள், WEWS.org எனும் நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் எனக் கூறி அடையாள அட்டையை காண்பித்து போராட்டத்தை திசை திருப்ப முயற்சித்துள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் போராட்டம் ஆரம்பமாகவிருந்த போது, ஊடகவியலாளர் என தம்மை அடையாளம் காட்டி, உள்நாட்டு விசாரணையை வலியுறுத்த கோரிய போதே இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் குறித்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களுடனும் முரண்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS
