வாகன இறக்குமதிக்கு அனுமதி...! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் (Anuradhapura) நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி
இறக்குமதி குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தத் தேர்தலை இலக்காக கொண்டு அரசாங்கத்தால் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலைக்கு நாட்டை இட்டுச் செல்ல முடியாது.
ஆகஸ்ட் மாதத்திற்குள் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் எப்படி படிப்படியாக நீக்கப்படும் என்பது குறித்து அரசின் நிலைப்பாட்டை நாங்கள் தெரிவிப்போம்.
வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களுக்கான அனுமதியை முதல் கட்டத்தில் வழங்குவோம்.
ஆனால் 2025 முதல் காலாண்டில் தனியாருக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கிறோம் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |