பிரபாகரனை வைத்து பிழைத்தவர்கள் எங்களுக்கு துரோகம் செய்கின்றனர் - ஆனந்தசங்கரி(காணொளி)
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை வைத்து பிழைத்தவர்கள் அவருக்கும் துரோகம் செய்து எங்களுக்கும் துரோகம் செய்கின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் இன்று(23) இடம்பெற்ற சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கூறியவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நாட்டில் மக்கள் மத்தியில் பட்டினி தாண்டவம் ஆடும் போது உள்ளூராட்சி தேர்தல் அவசியமா?
நாடாளுமன்ற தேர்தல்
தேர்தல் பிற்போடப்படவேண்டும். இப்போது நடத்த வேண்டிய தேர்தல் நீதியான நாடாளுமன்ற தேர்தல்.
பெரியவர் முதல் சிறியவர் வரை பொருத்தம் இல்லாதவர்களாக இருக்கின்றனர். இன்றைய நிலைமையைப்பார்த்தால் மக்கள் தேர்தலுக்கு தயாராக இல்லை. தேர்தலை நடாத்த வேண்டும் என்று, நாடாளுமன்றில் போராடுபவர்கள் ஏன் நாடாளுமன்றை கலைக்குமாறு போராடவில்லை.
விடுதலைப்புலிகள் வந்து ஒரு அமைப்பை உருவாக்குமாறும் உதயசூரியன் சின்னத்தை பயன்படுத்துமாறு கேட்டிருந்தனர்.
இறப்புக்கு காரணமாக இருந்தவர்கள்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஏனைய ஆயுதக்குழுக்களையும் ஒன்றிணைக்குமாறு என்னிடம் கேட்டிருந்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் இறப்புக்கு காரணமாக இருந்தவர்கள் எமது தலைவர்கள். இப்பொழுது உயிருடன் இருப்பதாக பொய் கூறுகின்றனர்.
பிரபாகரனை வைத்து பிழைத்தவர்கள் பிரபாகரனுக்கும் துரோகம் செய்து எங்களுக்கும் துரோகம் செய்கின்றனர்.என தெரிவித்தார்.