ஊடகவியலாளர் லசந்தவை முடக்க கோட்டாபய அனுப்பியிருந்த ரிப்போலி படைப்பிரிவு!
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் (Lasantha Wickramatunga) படுகொலையில் மிகவும் முக்கிய புள்ளியாக கருதப்படுபவர்தான் ரஷ்யாவுக்கான (Russia) இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க (udayanga weeratunga).
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு முக்கிய ஊழல் குற்றசாட்டில் அவர் சிக்கியமையே ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு அத்திவாரமிட்டது.
2006 ஆம் ஆண்டு ரஷ்யாவில் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக அவர் பதவியேற்ற உடனேயே உக்ரைனிடம் இருந்து நான்கு MiG 27 யுத்த விமானங்களை இலங்கை வான்படைக்காக அவர் கொள்வனவு செய்து இருந்தார்.
ஏற்கனவே உக்ரைன் பயன்படுத்திய நிலையில் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த யுத்த விமானங்களில் பாரிய ஊழல் இடம்பெற்றிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) காலத்திலேயே இவை அனைத்தும் இடம்பெற்ற நிலையில், கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) ஆட்சி பீடம் ஏறியதும் உதயங்க வீரதுங்க விடுதலை செய்யப்பட்டார்.
இருப்பினும், இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பிலும், இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் தொடர்பிலும் மற்றும் உதயங்க வீரதுங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உறவினர் என்ற விடயத்தையும் முன்கூட்டியே கணித்து அனைத்தையும் அம்பலப்படுத்தி இருந்தார் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க.
இது கோட்டாபய அரசுக்கு பாரிய அதிர்ச்சியை அளித்த நிலையில், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை நிரந்தரமாக வாய் மூட வைக்க முயற்சித்தது கோட்டாபய அரசாங்கம்.
இதையடுத்து எவ்வாறு ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை அரசாங்கம் முடக்கியது, அவரது படுகொலையின் பின்னணி, அன்றை அரசாங்கத்தின் மறைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய உண்மைகள் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
