13ம் திருத்தத்தை கூறி மக்களை ஏமாற்றும் அதிபர் - தில்வின் சில்வா பகிரங்கம்
அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்துவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய உறுதிமொழி பொது மக்களை ஏமாற்றும் தந்திரம் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் தில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
எரியும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருவதாக செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், ''நாடு முழுவதும் உள்ள மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து பேசிக் கொண்டிருந்தனர். எனினும் ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் 13 ஆம் திருத்தச்சட்டம் தொடர்பான இந்த உரையாடலை ஆரம்பித்தார்.
தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு

எனவே அவரின் இனவாதச் சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
ரணில் விக்ரமசிங்க உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவிக்கின்றார்.
தற்போது தேர்தல் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தேர்தலை நிறுத்தினால் பண விரயமே ஏற்படும்.'' என சுட்டிக்காட்டினார்.