சிறிலங்கா அரசாங்கத்தின் மற்றுமொரு முக்கிய தீர்மானம்!
Ranil Wickremesinghe
Sri Lanka
Government Of Sri Lanka
President of Sri lanka
By Kalaimathy
இலங்கையில், தடை செய்யப்பட்டுள்ள 11 இஸ்லாமிய அமைப்புகளில் ஆறு அமைப்புகளின் தடைகளை நீக்க சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதிபர் ஊழியர்கள் குழுவின் பிரதானி சாகல ரத்நாயக்கவின் தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது தடைகளை நீக்குவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கமைய தீர்மானம்
6 இஸ்லாமிய அமைப்புகளின் தடைகளை நீக்குமாறு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹாரிஸ், அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையிலேயே தடை நீக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் தடை நீக்கப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி