புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டது ஏன்..! அரசாங்கம் விளக்கம்

Bandula Gunawardane Government Of Sri Lanka Tamil diaspora
By Kanna Aug 16, 2022 06:16 AM GMT
Report

புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை எதிர்பார்த்து இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்கவில்லையென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதும், தனிநபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடை அரசால் இரண்டு நாட்களுக்கு முன்னர் நீக்கப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே பந்துல குணவர்தன இந்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளார்.

சட்டவிதிகளுக்கமைய தடை நீக்கப்பட்டது

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டது ஏன்..! அரசாங்கம் விளக்கம் | Sri Lanka Tamil Diaspora Ban Removal Govt Explains

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " முதலீடுகளை பெற தடை நீக்கப்பட்டதாக கூறுவது சிலரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்.

1968 ஆம் ஆண்டின் 45 இலக்க ஐக்கிய நாடுகள் சட்டவிதிகளுக்கமைய, பாதுகாப்பு அமைச்சினால் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதம் அல்லாத அமைப்புகள் மீதான தடை அல்லது தடைநீக்கம் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கைமய, 6 புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் மீதான தடை நீக்கப்பட்டது.

கண்காணிப்பின் பின்னரே தடை நீக்கப்பட்டது

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டது ஏன்..! அரசாங்கம் விளக்கம் | Sri Lanka Tamil Diaspora Ban Removal Govt Explains

அண்மைய காலங்களில் குறித்த அமைப்புகளின் நடவடிக்கை தொடர்பாக தொடர்ச்சியான தீவிர கண்காணிப்பின் பின்னரே இந்த தடை நீக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ள கொள்கைகளுக்கு அமையவே இந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை, புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடைநீக்கம் ஆனது பொருளாதார அரசியல் ரீதியாக வீழ்ந்து கிடைக்கும் சிறிலங்காவை மீட்டெடுக்கும் முகமாகவும் புலம்பெயர் தமிழர்களை சிறிலங்காவில் முதலீடு செய்ய வைக்கும் நோக்கத்துடனும் குறித்த தடையை சிறிலங்கா அரசு நீக்கியுள்ளதாக அரசியல் அவதானிகள் எதிர்வு கூறுகின்றனர் .

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019