புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்த ரணில்..! வகுக்கப்பட்ட மாற்று வியூகம்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது விதித்த தடைகளை இந்நாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க நீக்கியுள்ளமை தற்போது அரசியல் மட்டத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
வீழ்ந்து கிடைக்கும் சிறிலங்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க புலம்பெயர் தமிழர்களை ரணில் விக்ரமசிங்க தற்போது இலக்கு வைத்துள்ளார் என வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.
சிறிலங்கா அரசியலில் ஏற்படும் நெருக்கடி, பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரணில் வகுக்கும் வியூகங்கள், டொலர்களை குவிக்க ரணில் எடுத்துள்ள நடவடிக்கை என எமது தளத்தில் முக்கியமான செய்திகளை பிரசுரித்திருந்தோம்.
அவற்றுள் சில முக்கிய செய்திகளை நீங்கள் தவறவிட்டு இருக்கலாம். எனவே நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம்.
எரிபொருள் விலை இன்று குறைய வாய்ப்பு..! வெளியான தகவல்
எரிபொருள் விலை இன்று குறைக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலதிக தகவல் :- எரிபொருள் விலை இன்று குறைய வாய்ப்பு..! வெளியான தகவல் |
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்..! தங்க நிலவரம்
சமீப காலமாக உலக சந்தையில் தங்கம் விலையானது உயர்வடைந்து வருகின்றது.
அமெரிக்க பத்திர சந்தையின் வட்டி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு தங்கம் விலையானது உயர்ந்துள்ளது என எதிர்வு கூறப்படுகின்றது.
மேலதிக தகவல் :- தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்..! தங்க நிலவரம் |
சீனக்கப்பலின் வருகைக்கு பதிலடி..! இலங்கை வந்தடைந்தது இந்தியாவின் உளவு விமானம்
சிறிலங்கா கடற்படையினருக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இந்திய கடற்படைக்கு சொந்தமான டோர்னியர் -228 கடல்சார் கண்காணிப்பு விமானம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சென்றடைந்துள்ளது.
இந்திய சுதந்திரதினமான இன்றைய தினம் குறித்த விமானம் வழங்கப்படுள்ளது.
மேலதிக தகவல் :- சீனக்கப்பலின் வருகைக்கு பதிலடி..! இலங்கை வந்தடைந்தது இந்தியாவின் உளவு விமானம் |
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய ( ஓகஸ்ட் 15 ) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 29 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 60 சதமாகவும் பதிவாகியுள்ளது.
மேலதிக தகவல் :- டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்
|
சிங்கப்பூரில் கோட்டாபயவின் ஆடம்பரம்! செலவு செய்த பெரும் தொகை
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை விடுதிக்கான கட்டணமாக செலுத்தியதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்சவும் கடந்த 11 ஆம் திகதி தாய்லாந்து செல்லும் வரை சிங்கப்பூரில் உள்ள மரினா பே சேண்ட்ஸ் விடுதியில் தங்கியிருந்தனர்.
மேலதிக தகவல் :- சிங்கப்பூரில் கோட்டாபயவின் ஆடம்பரம்! செலவு செய்த பெரும் தொகை
|
யாழ்ப்பாணத்தில் பலரையும் வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவொன்று பலரையும் வியக்க வைத்துள்ளது.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியின் பூநாரி மடத்தடியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பூப்புனித நீராட்டு விழாவொன்று இன்று இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.
மேலதிக தகவல் :- யாழ்ப்பாணத்தில் பலரையும் வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா |
எதிர்வரும் நான்கு நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை
இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) எதிர்வரும் நான்கு நாட்களில் 03 மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன் படி, நாளாந்த மின்வெட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரை 03 மணித்தியாலங்களாக நீடிக்கப்படும் என PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் :- எதிர்வரும் நான்கு நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை |
முக்கியமான புலம்பெயர் அமைப்புகள் சிலவற்றிற்கு தொடர்ந்தும் தடை விதித்தால்..!
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் மீதும், தனி நபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நீக்கியமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் ஊடகங்களுக்கு கூட்டாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல் :- முக்கியமான புலம்பெயர் அமைப்புகள் சிலவற்றிற்கு தொடர்ந்தும் தடை விதித்தால் எதிர்பார்க்கும் காரியங்கள் நடக்காது! |