திறந்து வைக்கப்படவுள்ள கொழும்பு தாமரைக் கோபுரம்: வெளியாகிய தகவல்
Colombo
Government Of Sri Lanka
Government of China
Economy of Sri Lanka
By Kiruththikan
தாமரை கோபுரம்
சீன கடனுதவியில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட தாமரைக் கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 300 மீற்றர் உயர கோபுரத்தை திறக்க கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, தாமரை கோபுரத்தில் அலுவலக வசதிகள், காட்சியறைகள், மாநாட்டு அரங்குகள் மற்றும் பிரத்தியேகமான வர்த்தக நிலையங்களை பெற முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கம்
அவ்வாறே அதில், சர்வதேச அளவிலான நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்