பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைசாத்திட்டது சிறிலங்கா
மாலைதீவுக்கும் சிறிலங்காவிற்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று (07) சிறிலங்கா மற்றும் மாலைதீவுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வுடன் இணைந்து இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாலைத்தீவில் சுகாதார ஒத்துழைப்பு, கலாசார ஒத்துழைப்பு மற்றும் கலாசார மையத்தை நிறுவுதல் போன்றன தொடர்பாக குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

சிறிலங்காவிற்க்கும் மாலைதீவுக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வு நேற்றும் நேற்று முன்தினமும் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
இந்த அமர்வில் மாலைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்தி மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷஹீட் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.