அரைகுறை ஆடையுடன் சபை அமர்விற்குச் சென்ற கூட்டமைப்பு உறுப்பினர்!
United National Party
Sri Lanka
Easter Attack Sri Lanka
Tamil National Alliance
By Kalaimathy
வலிகாமம் தென்மேற்கு மனிப்பாய் பிரதேச சபையின் அமர்வு சபையின் தவிசாளர் அ. ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்றது .
இன்றைய தினம் கூட்டத்திற்கு சமூகமளித்தவர்கள் சிலர் கோட்டாபயவின் உருவ பொம்மையை எடுத்து வந்துள்ளனர்.
எடுத்துவரப்பட்ட உருவபொம்மை கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் சபை முன்றலில் வைத்து தீயிடப்பட்டது.
அத்தோடு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நினைவு கூரும் வகையில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரால் சிலுவை ஒன்றும் இன்று சபைக்கு எடுத்து வரப்பட்டது.
நாட்டு மக்கள் படும் துன்பங்களை குறிக்கும் விதத்திலும் இலங்கை தற்போது அரை அம்மணமாக உள்ளதாக தெரிவித்தும், சிறுவர்கள் பசியால் வாடுவதை குறிக்கும் விதத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் அரை குறையாக அணியப்பட்ட ஆடையுடன் சபை விவாதத்தில் பங்கெடுத்தார்.






4ம் ஆண்டு நினைவஞ்சலி