முல்லைத்தீவில் பாரிய போராட்டம்- படையினரின் சமரசம் தோல்வியில்!

Sri Lanka Army Mullaitivu Sri Lanka SL Protest Sri Lanka Fisherman
By Kalaimathy May 26, 2022 09:04 AM GMT
Report

பாரிய போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் எரிபொருளை பெற்றுத்தரகோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை  முன்னெடுத்துள்ளார்கள்.

மண்ணெண்ணைய் இல்லாத நிலையினால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்ல முடியாமையினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மண்ணெண்ணை பெற்றுத்தரக்கோரி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.

இன்று காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அலுவலகம் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது.

முல்லைத்தீவில் பாரிய போராட்டம்- படையினரின் சமரசம் தோல்வியில்! | Sri Lanka Mullaitivu Fuel Protest

மனு கையளிப்பு

மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கடற்தொழிலாளர்கள் மண்ணெண்ணை பெற்றுத்தரகோரி கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள். இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் ஆர்ப்பாட்டகாரர்களை உள்ளே அழைத்து கடற்தொழிலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ஏற்றுக்கொண்டுள்ளார்.

அவ்வாறு கையளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

சாலை தொடக்கம் கொக்குளாய் முகத்துவாரம் வரையான எமது மீனவர்கள் மற்றும் தென்னிலைங்கையில் இருந்து னெ்று தொழில் புரியும் மீனவர்களுக்கும் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, நாயாறு போன்ற எரிபொருள் நிலையங்கள் ஊடாகவே எரிபொருள் விநியோகம் நடைபெற்று வருகின்றது.

முல்லைத்தீவில் பாரிய போராட்டம்- படையினரின் சமரசம் தோல்வியில்! | Sri Lanka Mullaitivu Fuel Protest

மக்களின் கோரிக்கை

இருந்த போதிலும் இவ்எரிபொருள் நிலையங்களுக்கு வரும் எரிபொருள் எமது மாவட்ட மீனவர்களுக்கு போதுமானதாகவில்லை அத்துடன் கடந்த 08.05.2022 தொடக்கம் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மண்ணெண்ணைய் வரவில்லை இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விலையேற்றம் காரணமாக மக்கள் பட்டிணிச்சாவினை எதிர்நோக்கியுள்ளனர். எனவே தயவு செய்து எமது மீனவ மக்களின் இந்த நிலையினை கருத்தில் கொண்டு தொழில் புரிவதற்கான எரிபொருளை பெற்றுத்தருமாறு மீனவர்கள் சார்பாகவும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்பு சார்பாகவும் கேட்டுக்கொள்கின்றோம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

முல்லைத்தீவில் பாரிய போராட்டம்- படையினரின் சமரசம் தோல்வியில்! | Sri Lanka Mullaitivu Fuel Protest

அசாங்க அதிபரின் உறுதி மொழி

இதன்போது கடற்தொழிலாளர்களிடம் கருத்து தொரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்,

நேற்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர்  தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது பொதுவாக எல்லா மாவட்டத்திலும் மண்ணெண்ணைத் தட்டுப்பாடு தொடர்ச்சியாக இருக்கின்றது. மீனவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் மாத்திரமல்ல விவசாய உற்பத்தி வீதமும் குறைந்துள்ளது.

எரிபொருள் விநியோகத்துக்கு பொறுப்பான பிராந்திய முகாமையாளருடன் இன்று கதைத்துள்ளோம். இன்று இரண்டு தாங்கி மண்ணெண்ணைய் அனுப்புவதாக உறுதிமொழி தந்துள்ளார்கள்.

முல்லைத்தீவில் பாரிய போராட்டம்- படையினரின் சமரசம் தோல்வியில்! | Sri Lanka Mullaitivu Fuel Protest

இலங்கையில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காணப்படுகின்றது. மொத்தமாக 320 மெற்றிக்தொன் தான் இருக்கின்றதாம். நேற்று நடைபெற்ற மாவட்ட செயலக அதிகாரிகளின் கூட்டங்களில் மாவட்ட செயலக அதிகாரிகளால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

மீனவர்களின் கோரிக்கையினை கடற்தொழில் அமைச்சுக்கும் எரி சக்தி அமைச்சிற்கும் நாங்கள் அனுப்பவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த போராட்டத்தில் மீனவர்களுடன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்

முல்லைத்தீவில் பாரிய போராட்டம்- படையினரின் சமரசம் தோல்வியில்! | Sri Lanka Mullaitivu Fuel Protest

இராணுவம் சமரசம்

குறித்த போராட்டத்தை மீனவர்கள் ஆரம்பித்த போது சம்பவ இடத்துக்கு சென்ற இராணுவத்தினர் மண்ணெண்ணெய் பெற்றுத்தருவதாக மீனவர்களுடன் கலந்துரையாடி போராட்டத்தை நிறுத்த முயற்சித்திருந்தனர்.

இருப்பினும் மீனவர்கள் இந்த விடயத்துக்கு உடன்படாமல் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முல்லைத்தீவில் பாரிய போராட்டம்- படையினரின் சமரசம் தோல்வியில்! | Sri Lanka Mullaitivu Fuel Protest


ReeCha
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025