ஐ.நா பிரதிநிதிகளால் முல்லைத்தீவில் திரட்டப்பட்ட தரவுகள்!
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில், ஐ.நா உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடல் இன்று பி.ப 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் மாவட்டத்தில் எதிர்நோக்குகின்ற முக்கியமான உணவுப் பிரச்சினைகள் மற்றும் விவசாய, விலங்கு வேளாண்மை உற்பத்திகளின் தற்போதைய நிலை, இவற்றுக்கு இருக்கின்ற பிரதானமான தடைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதோடு, ஐ.நா பிரதிநிதிகளால் தரவுகள் திரட்டப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐ.நா பிரதிநிதிகள்
இதில் இலங்கை விவசாய அமைச்சின் அதிகாரிகள், யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதி, மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர், மாவட்ட நீப்பாசனப் பொறியியலாளர், மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர், மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் உதவிப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்ட விவசாயப் பிரிவின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.