தமிழக முதல்வரின் குற்றச்சாட்டை மறுக்கும் சிறிலங்கா கடற்படை
இந்திய கடற்றொழிலாளர்களை இனந்தெரியாதவர்கள் தாக்குவதாகவும், அவர்களின் கடற்றொழில் கப்பல்களை சேதப்படுத்துவதாகவும் தெரிவித்து தமிழகத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை சிறிலங்கா கடற்படை மறுத்துள்ளது.
நாளாந்தம் நூற்றுக்கும் அதிகமான இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் தொழில் ஈடுபடுகின்றனர்.
இதனை தடுப்பதற்கு சிறிலங்கா கடற்படை சகல முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதாக கடற்படைப் பேச்சாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
உள்ளூர் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படல்
எனினும் இது சாத்தியமில்லாத போதே சிலர் கைது செய்யப்படுவதாகவும் இதன்போது கடற்படையினர் ஒருபோதும் அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அத்துமீறல் நடவடிக்கைகள் உள்ளூர் கடற்றொழிலாளர்களுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதால் நாட்டின் கடல் பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு தமிழக கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல் மாத்திரமே விடுக்கப்படுகிறது.
சில சந்தர்ப்பங்களில் இருதரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெறலாம் ஆனால் அது நிச்சயமாக தமது கண்காணிப்பில் இல்லை என்றும் கயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடிக்கு கடிதம்
இந்த விடயம் தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

இதன்போது, சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள் முறையற்ற விதத்தில் நடத்தப்படுவதாகவும், அவர்களையும் அவர்களது படகுகளையும் மீட்பதற்காக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் தமிழக கடற்றொழிலாளர்களை மீது அடையாளம் தெரியாத குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் மு.க. ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        