சிறிலங்கா கடற்படை வீரரின் மனைவி, மகன் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்பு
வாரியபொல வல்பொல பிரதேசத்தில் வசிக்கும் 6 வயது சிறுவனும் அவனது தாயும் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வாரியபொல காவல்துறையினர் தெரிவித்தனர்.
குருநாகல் பாதுகாப்பு சேவை கல்லூரியில் முதலாம் தரத்தில் கல்வி பயின்ற ஆர்.எம். கோவிடா சரமித் (06) மற்றும் இ.எம். லக்மாலி வீரசிங்க (37). இருவருமே மரணமடைந்தவர்களாவர்.
வயல்வெளியில் அமைந்துள்ள கிணற்றில் குளிப்பதற்கு
இவர்கள் இருவரும் நேற்று (22) வீட்டிற்கு அருகிலுள்ள வயல்வெளியில் அமைந்துள்ள கிணற்றில் குளிப்பதற்குச் சென்றதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்ற தாய் கிணற்றில் குதித்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சிறுவனின் தந்தை கடற்படையில் பணிபுரிவதாகவும் அவர் தூர மாகாணத்தில் இருப்பதால் தாயும் குழந்தையும் மட்டுமே வீட்டில் இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
கிணற்றின் அருகே சோதனையிட்டபோது
இதனால், குளிக்கச் சென்ற இருவரையும் தேட யாரும் இல்லை என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் மாலை 6:00 மணிக்கு மேல் இருவரும் வீட்டில் இல்லாததை அக்கம் பக்கத்தினர் அறிந்தனர். பின்னர், இந்த கிணற்றின் அருகே சோதனையிட்டபோது, சிறுவன் மற்றும் தாயின் காலணிகள் மற்றும் உடைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் கிணற்றில் சடலங்களை கண்டெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.