சீனா வழங்கிய கடன் - இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் விதித்த நிபந்தனை
ஐ.எம்.எவ். விதித்த நிபந்தனை
"சீனா ஒரு பெரிய கடன் வழங்குநர். எனவே அந்த நாடு வழங்கிய கடனை மறுசீரமைக்க அந்த நாட்டுடன் இலங்கை தீவிரமாக பேச்சில் ஈடுபட வேண்டும்" என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் செவ்வாயன்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இலங்கை அண்மைய வரலாற்றில் மிக மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி, சீனா இலங்கைக்கு 6.5 பில்லியன் டொலர் கடனை வழங்கியுள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, இலங்கையில் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி ஆலைகள் போன்ற திட்டங்களில் முதலீடு செய்துள்ளது.
மோசமான பொருளாதார நெருக்கடி
1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை, அதிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் வசதியை கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.