சிறிலங்காவின் புதிய அதிபர் டலஸ் அழகப்பெரும..! சன்ன ஜயசுமன உறுதி
சிறிலங்காவின் புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவால் தேவையான வாக்குகளை விட 20 வாக்குகளை அதிகமாக பெற முடியும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
டலஸுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இணக்கப்பாடு
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " தொழில் வல்லுநர்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு புதிதாக வருகை தந்துள்ளவர்கள் டலஸ் அழகப்பெருமவை அதிபராக்குவது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.
மோசடி மற்றும் ஊழலற்ற ஒருவரே நாட்டை வழிநடத்த வேண்டும். அழகப்பெரும அத்தகைய பண்புகளை கொண்டவர்.
அடுத்த 18 மாதங்களில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான தனது திட்டங்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார் " எனக் குறிப்பிட்டார்.