24 மணிநேரத்தில் பதிவாகிய மழைவீழ்ச்சி - மக்களின் இயல்பு நிலை பாதிப்பு
Vavuniya
TN Weather
Weather
By Kiruththikan
வவுனியா நகரில் நேற்று காலை முதல் இன்று காலை வரையான 24 மணித்தியாலயத்தில் 189.2மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வவுனியா நகரில் நேற்று முதல் பரவலான மழை பெய்து வருகின்றது. இதனால் பல வீதிகள் தாழ் நிலங்களில் குடியிருக்கும் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
அத்துடன் குளங்கள் நிரம்பி வழிகின்றன வயல் நிலங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
189.2மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி
நேற்று காலை 8.30மணி தொடக்கம் இன்று காலை 8.30மணிவரையான 24மணிநேர காலப் பகுதியில் 189.2மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி வவுனியா நகரில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்ட தகவலில் மேலும் தெரிவித்துள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி