2026 ஆம் ஆண்டுக்குரிய வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்கள் முடக்கம்!

Sri Lanka Northern Province of Sri Lanka Education Teachers
By Theepan May 04, 2026 01:02 AM GMT
Report

2026 ஆம் ஆண்டுக்குரிய ஆசிரியர் இடமாற்றங்கள் வட மாகாணத்தில் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என இலங்கைத் தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்ட செயலாளர் அருள்வதன்ன் டினோசன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சேவையின் தேவையைக் கருத்திற்கொண்டு இடமாற்றங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் தேசிய மட்ட இடமாற்றங்களும் நிறுத்தப்பட்டுள்ளன என்ற காரணம் உண்மைக்குப் புறம்பானது மற்றும் தவறானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம்...! 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

உச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம்...! 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

ஆசிரியர் இடமாற்றங்கள் 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், வழமையாக ஆசிரியர் இடமாற்றங்கள் ஆண்டின் தொடக்கத்தில், குறிப்பாக ஜனவரி மாதத்தில் நடைமுறைக்கு வர வேண்டும் என்றாலும், இவ்வாண்டு அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படாதது கவலைக்குரிய விடயமாகும் எனத் தெரிவித்துள்ளார்.

சில பாடசாலைகளில் பதிலீட்டு ஆசிரியர்கள் இருந்தபோதிலும் இடமாற்றம் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்படாத நிலை தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்குரிய வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்கள் முடக்கம்! | Sri Lanka Northern Province Teachers Transfer 2026

குறிப்பாக வன்னி போன்ற கடின சேவைப் பகுதிகளில் ஒன்பது ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்குக் கூட இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் பல பகுதிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் காரணமாக ஆசிரியர்களின் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு: காரமுனை முதல் முறாவோடை வரை - அம்பலமாகும் உண்மைகள்

கிழக்கில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு: காரமுனை முதல் முறாவோடை வரை - அம்பலமாகும் உண்மைகள்

சம்பள உயர்வு

இதற்கு மாறாக ஆசிரியர்களின் சம்பளங்களில் எந்த உயர்வும் இல்லாததால் அவர்கள் கூடுதல் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் திட்டமிட்ட முறையற்ற இடமாற்றங்களால் சில ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டாலும் நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகளுடன் இடமாற்றம் எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்குரிய வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்கள் முடக்கம்! | Sri Lanka Northern Province Teachers Transfer 2026

இதனால் பல ஆசிரியர்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, உரிய காலக்கட்டத்தில் நியாயமான முறையில் ஆசிரியர் இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தாய்மொழி ஆசிரியர் சங்கம் தாழ்மையுடன் கோருகிறது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு: காரமுனை முதல் முறாவோடை வரை - அம்பலமாகும் உண்மைகள்

கிழக்கில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு: காரமுனை முதல் முறாவோடை வரை - அம்பலமாகும் உண்மைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி