மோடி வருகை - தெருநாய்களை அகற்ற வேண்டாம்!! இந்தியாவில் இருந்து அநுரவுக்கு கடிதம்
பிரதமர் மோடி நாட்டிற்கு வருகை தருகிறார் என்பதற்காக தெரு நாய்களை அகற்றுவதில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இந்திய தரப்பில் இருந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய விலங்கு நல சபையின் முன்னாள் தலைவரினால் இன்று (03) இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையினால் அநுராதபுரம் நகர எல்லைக்குள் உள்ள அனைத்து தெருநாய்களையும் அகற்ற அநுராதபுரம் ஆளுநர் அலுவலகம் முடிவு செய்திருந்தது.
அத்துடன், மோடியின் இலங்கை வருகையின் போது கொழும்பு நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள தெரு நாய்களை அகற்ற இலங்கை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையைக் கண்டித்து ஒரு போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டம்
அதன்போது, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் முன்பாக பல விலங்கு ஆர்வலர்கள் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், தமது பிரதமர் உங்கள் அழகான நாட்டிற்கு வருகை தருகிறார் என்பதற்காக நாய்களை அகற்றுவதில் ஈடுபடுவதைத் தவிர்க்க மாநகரசபைகளுக்கு உத்தரவுகளை வழங்குமாறு இந்திய விலங்கு நல சபையின் முன்னாள் தலைவர் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்