வாவிப் பகுதியில் அபாயகரப் பொருள்- கிராமவாசி வழங்கிய தகவல்!
ஆவேலியா பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டம் ஆவேலியா பகுதியில் அமைந்துள்ள நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான வாவியில் (பெரேக் லேன் ஆவேலியா) இருந்து டி 82 ரக கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
நுவரெலியா ஆவேலியா பகுதியில் வசிக்கின்ற தொழிலாளி ஒருவர், காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், வாவி அமைந்திருக்கும் பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்ட போதே கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கை ஒன்றை நுவரெலியா நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவின் பின்பு இந்த கைக்குண்டை அழிப்பதா அல்லது வேறு தரப்பினரிடம் கையளிப்பதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், காவல்துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





