நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் : இலங்கை அணி அறிவிப்பு
நியூசிலாந்துக்கு(new zealand) எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள 17 பேர் கொண்ட தேசிய ஆண்கள் அணி இலங்கை கிரிக்கெட்(sri lanka cricket) தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடர்கள் 2025 ஜனவரி 5, 8 மற்றும் 11 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளன.
மூன்று ஆட்டங்கள்
மூன்று ஆட்டங்கள் முறையே வெலிங்டன்,(Wellington,) ஹமில்டன்(Hamilton) மற்றும் ஒக்லாந்தில்(Auckland) நடைபெறவுள்ளன. முதல் போட்டி அதிகாலை 03:30 மணிக்கு (IST) தொடங்கும், மீதமுள்ள போட்டிகள் காலை 06:30 மணிக்கு தொடங்கும்.
தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் வருமாறு,
சரித் அசலங்க(அணித்தலைவர்),பத்தும் நிசங்க,அவிஷ்க பெர்னாண்டோ,நிசான் மதுஷங்க,குசல் மென்டிஸ்,கமிந்து மென்டிஸ்,ஜனித் லியனகே,நுவான்டு பெர்னாண்டோ,டுனித் வெல்லகே,வனிந்து ஹசரங்க,மகேஷ் தீக்சன,ஜெவ்றி வண்டர்சே,சமிந்து விக்ரமசிங்க, அசித பெர்னாண்டோ,மொகமட் சிராஸ்,லகிரு குமார,இசான் மலிங்க
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |