க.பொ.த சாதாரண தரப்பரீட்சை : மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப்பரீட்சை தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்த பரீட்சை பிற்போடப்படும் என பல செய்திகள் வெளியாகியிருந்த பின்னணியிலேயே, அவர் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.
விடைத்தாள் மதிப்பீடு
அத்துடன், க.பொ.த உயர்தரப் பரீட்சை 2022 (2023) ஆம் ஆண்டுக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஏற்கனவே இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காக வழங்கப்படும் ஆயிரத்து 450 ரூபாய் உதவித் தொகையை இரண்டாயிரம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமித் ஜயசுந்தர கூறியுள்ளார்.
உதவித் தொகை
இதேவேளை, 2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடும் பரீட்சார்த்திகளுக்கும் அதே கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
மேலும், 2023 (2024) க.பொ.த (உ/த) பரீட்சையின் பிரதான கண்காணிப்பாளர்கள், இணை கண்காணிப்பாளர்கள், தலைமை மேற்பார்வையாளர்கள் மற்றும் மேலதிக பிரதான மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கும் 2022 (2023) க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டோருக்கும் திருத்தப்பட்ட கொடுப்பனவுகள் வழங்கப்படும் என அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |