கோட்டாபயவுடனான பேச்சுவார்த்தை தோல்வி- பதவி விலகும் பிரதி சபாநாயகர்!
freedom party
sri lanka
parliament
ranjith siyambalapitiya
By Kalaimathy
சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத்தில் தனித்து செயற்படுவதாக அறிவித்ததையடுத்து, பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் நேற்றைய தினம்இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆளும் அரசாங்கக் கூட்டு முன்னணியில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக அமரத் தீர்மானித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தீர்மானம் தொடர்பில் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி