இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டம் தொடர்பில் விவாதம்..! சற்றுமுன்னர் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வு(நேரலை)
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
Sri Lankan political crisis
By Kanna
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்வழி பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் 10.30 மணி முதல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து விவாதம் நடத்தப்படும் என்றும் நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாலை 4.30 மணியுடன் முடிவடையவுள்ள அரசாங்க விவகாரங்கள் மீதான விவாதத்திற்கான நேரம் மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மாலை 5.30 மணி வரை மீதமுள்ள 30 நிமிடங்கள் ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தவும் ஒத்திவைப்பு நேரத்தில் கேள்விகளுக்கு ஒரு நாள் ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும் ! 45 நிமிடங்கள் முன்
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
22 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி