கையறு நிலையில் சிறிலங்கா அரசாங்கம்- நாடாளுமன்றில் ஏற்படவுள்ள திருப்பம்!
colombo
sri lanka
parliament
gotabaya
podujana peramuna
By Kalaimathy
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க போவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரக்கொடி மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரே இவ்வாறு முடிவு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய அரசாங்கத்தில் எவ்வித பதவிகளையும் ஏற்க போவதில்லை எனவும் அவர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நாளைய தினம் நடைபெறவுள்ள அவசரகால சட்டம் தொடர்பான வாக்கெடுப்பின் போது அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இனிவரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படபோவதாகவும் இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி