புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்களுக்கு பகிரங்க அழைப்பு!

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lankan political crisis
By S P Thas May 18, 2022 10:36 AM GMT
Report

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடியது. இதன்போது உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க,

உலக வங்கி அவசர தேவைகளுக்காக நேற்று 160 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. எனினும் அதனை பெட்ரோல் இறக்குமதிக்காக பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கிறோம்.

நாம் இதனை எதிர்பார்க்கின்றபோதும் இன்று உலக வங்கி அதிகாரிகளுடன் கொழும்பில் இடம்பெறவுள்ள சந்திப்பின்போது அவர்களிடம் இது தொடர்பில் கோரிக்கையை முன்வைக்கவுள்ளேன்.

அவர்கள் இணங்கினால் பெட்ரோல் விநியோகத்தில் உள்ள பிரச்சினையை தற்காலிகமாக தீர்க்கமுடியும். இல்லையேல், பெட்ரோலுக்காக நிதியை தேடும் பணியில் ஈடுபடவேண்டியிருக்கும்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்காதபோதும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரியதுபோன்று, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹர்ச டி சில்வா, எரான் விக்கிரமரட்ன மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரை இணைத்து செயற்படுவதில் எமக்கு பிரச்சினையில்லை.

இதேவேளை, கட்சிகளின் பிரதிநிதிகளின் கீழ் மாவட்ட மட்டத்தில் குழுக்களை அமைத்து பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சியை மேற்கொள்ளவுள்ளளோம் என்றார்.

இதற்கிடையில், நாட்டின் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு நீரிழிவு நோய் தொடர்பான மருந்தை பெற்றுத்தரவேண்டும் என்று அவர், எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த சஜித் பிரேமதாச, தாம் உயிர் காக்கும் கருவிகளையே வைத்தியசாலைகளுக்கு விநியோகித்து வருவதாக குறிப்பிட்டார்.

எனினும் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கையின்படி, குறித்த ஒரு மருந்தை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் வைத்து கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் வெளிநாட்டவர்கள், இலங்கைக்கு சுற்றுலாவை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் சர்வதேச சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026