முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதிய ரத்து: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்துச் செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய (Karu Jayasuriya) கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் என்ற வகையில் அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “தற்போதைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது துணைவியர்கள் என்று 490 பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
ஓய்வூதிய ரத்து
அவர்களில் பெரும்பாலானவர்கள் குறித்த ஓய்வூதியத்தைக் கொண்டே தங்கள் வாழ்க்கைச் செலவுகளை சமாளித்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு வருமானப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர்.
மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவான எல்லோருமே திருடர்களோ, மோசடிப் பேர்வழிகளோ அல்ல.
பொருளாதார சிரமங்கள்
அவ்வாறான நிலையில் ஏராளம் பொருளாதார சிரமங்களுடன் வாழும் அவர்கள் தொடர்பில் கனிவுடன் பரிசீலனை செய்ய வேண்டும்.
இந்தியா (India), அமெரிக்கா (United States), இங்கிலாந்து (England), ஐரோப்பிய நாடுகள் என்பற்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.
அவ்வாறான நிலையில் இலங்கையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்துச் செய்யும் தீர்மானம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வேண்டிக் கொள்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

