எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
Ceylon Petroleum Corporation
Sri Lanka
Sri Lankan Peoples
Kanchana Wijesekera
By Dilakshan
அடுத்த வருடம் முதல் எரிபொருள் விலை தானாகவே திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் இன்று (13) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய விலைகள்
மேலும், எரிபொருள் விநியோகம், புதிய எரிபொருள் நிலையங்களை நிர்மாணித்தல் மற்றும் மசகு எண்ணெய் விற்பனை தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்குகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
எரிபொருள்களின் தற்போதைய விலைகள் பின்வருமாறு,
- லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன்: 361.00 ரூபாய்
- லங்கா பெட்ரோல் 95 ஒக்டேன் : 417.00 ரூபாய்
- டீசல் : 341.00 ரூபாய்
- சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ : 359.00 ரூபாய்
- மண்ணெண்ணெய் : 231.00 ரூபாய்
- கைத்தொழில் மண்ணெண்ணெய்: 238.00 ரூபாய்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்