பொதுஜன பெரமுன தேசிய அரசியலில் தீர்க்கமான சக்தியாக மாற்றப்படும்: நாமல் ராஜபக்ச உறுதி!
சதிகள் மற்றும் போராட்டங்கள் மூலம் மக்களை பயமுறுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தங்காலை காரியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது பொது மாநாடு பிரமாண்டமான முறையில் மற்றும் பெருந்தொகையான மக்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.
இரண்டாவது பொது மாநாடு
கட்சி மீண்டும் அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு நாட்டின் தேசிய அரசியலில் தீர்க்கமான சக்தியாக மாற்றப்படும்.
பொதுஜன பெரமுனவின் இரண்டாவது பொது மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் டிசெம்பர் 15 ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.
அதற்காக கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அடிமட்ட உறுப்பினர்கள் நான்கு திசைகளிலும் இருந்து வருவார்கள் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |