தீவிரமடைந்துள்ள முறுகல்- அரசாங்கத்திலிருந்து சுதந்திர கட்சி உடனடியாக விலகுகிறதா? வெளியான தகவல்!
சிறிலங்கா அரசாங்கத்திலிருந்து உடனடியாக விலகுவதற்கான நோக்கம் இல்லையென சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
எனினும் சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளை தாம் தொடர்ந்தும் விமர்சிக்கவுள்ளதாகவும் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில், விமர்சனங்களை முன்வைப்பதை விடுத்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி கண்ணியத்துடன் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சரும் பிரதமரின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சுதந்திரக் கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் எந்தவொரு பிளவும் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இரு கட்சிகளுக்கு இடையில் கருத்த வேறுபாடுகள் காணப்படுகின்ற போதிலும் அரசாங்கத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றது என்பதை நினைவூட்டும் வகையில் பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு கடந்த வியாழக்கிழமை குறுஞ்செய்தி அனுப்பியதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் சுதந்திரக் கட்சியை சமமான மற்றும் கௌரவமான பங்காளிக் கட்சியாக பொதுஜன பெரமுன நடத்தவேண்டும் என சாகர காரியவசத்திடம் வலியுறுத்தியதாக சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
You May Like This
