கடமை தவறிய காவல்துறை அதிகாரி பணி நீக்கம்
சிறிலங்காவில் கடமை தவறிய காவல்துறை அதிகாாியொருவர் பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு உயிா்த் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த காவல்துறை அதிகாாி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
கட்டான காவல் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு பிாிவின் காவல்துறை சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
குற்ற ஒப்புதல்

காவல்துறை மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த அதிகாரிக்கு எதிராக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, ஒழுக்காற்று மீறல்கள் தொடர்பாக 12 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிம் அனுப்பப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரி தனது குற்றத்தை விசாரணை ஆரம்பத்தின் போதே ஒப்புக்கொண்டதால் அவரை பணி நீக்கம் செய்ய காவல்துறை மா அதிபர் தீர்மானித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.