தக்க தருணத்தை பயன்படுத்திக் கொள்ளுமா தமிழர் தரப்பு?
sri lanka
political
crisis
MK Sivajilingam
By Vanan
தற்போது கிடைத்துள்ள சரியான தருணத்தை தமிழர் தரப்பு சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் ( M.K. Sivajilingam) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் 113 பேரின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபிக்கும் எந்தத் தரப்புக்கும் அரசாங்கத்தை கையளிக்க தயார் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ள நிலையில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று(5) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் கட்சிகள் முன்வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி