சிறிலங்காவின் அரசியலமைப்பை மீறிய ரணில்: நாடாளுமன்ற விவாதத்தை வலியுறுத்துகிறார் சுமந்திரன்
சிறிலங்கா அரசியலமைப்புக்கு அமைய தற்போதைய காவல்துறை மா அதிபர் நியமிக்கப்படவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க சட்டத்துக்குட்படாது இந்த நடவடிக்கையை முன்னெடுத்து அரசியலமைப்பை மீறியுள்ளதாக இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
நிறைவேற்றப்பட வேண்டிய சட்டங்கள்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சிறிலங்காவின் அரசியலமைப்பை ரணில் விக்ரமசிங்க மீறியுள்ளார். இது ஒரு சுட்டிக்காட்டத்தக்க குற்றம்.
அத்துடன், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய 3 சட்டங்கள் உள்ளன. இதில் இரண்டு சட்டங்களை நிறைவேற்ற முடியும்.
எனினும், ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்த நாடாளுமன்ற விவாதம் தேவைப்படுகிறது.
இதன்படி, நீதிமன்ற அவமதிப்பு சட்டமூலத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய சில முக்கிய விடயங்கள் இருக்கின்றன. இதனால் குறித்த சட்டத்தை நிறைவேற்ற நாம் அனுமதிக்க மாட்டோம். என்றார்.