மாத இறுதியில் கொழும்பில் வெடிக்கவுள்ள போராட்டம்! புலனாய்வுப் பிரிவினர் அரசுக்கு வழங்கிய எச்சரிக்கை
Ranil Wickremesinghe
Sri Lanka
SL Protest
By pavan
கொழும்பில் எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் போராட்டம் வெடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 30 ஆம் திகதியே இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளார்.
அன்றைய தினம் கொழும்புக்கு வந்து ஆர்ப்பாட்டங்களை நடத்த போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட அமைப்புகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு வந்த போராட்டகாரர்கள்
இந்நிலையில், அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிட சில வாரங்களுக்கு முன்னர் கூட போராட்டகாரர்கள் கொழும்புக்கு வந்தனர்.
அப்போது பாதுகாப்பு தரப்பினர் கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தண்ணீர் தாரை தாக்குதல் நடத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை கலைத்தமை குறிப்பிடத்தக்கது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி